தனிப் பயணம்
நிலையான கட்டணத்தில் தனி வாகனம்.
இரண்டு இடங்களைத் தட்டச்சு செய்யுங்கள். முன்பதிவுக்கு முன்பே ஒவ்வொரு வகைக்குமான நிலையான கட்டணம் தெரியும்; பயண நாளில் அது மாறாது.
பிரபல வழித்தடங்கள்
ஒருவழிப் பயணத்துக்கு, ஒரு வாகனத்துக்கான நிலையான கட்டணம்.
| வழி | தூரம் | நேரம் | கட்டணம் |
|---|---|---|---|
| கொழும்பு → யாழ்ப்பாணம் | ≈395 கி.மீ. | சுமார் 7½ மணி | LKR 30,000 முதல் |
| கொழும்பு விமான நிலையம் (BIA) → யாழ்ப்பாணம் | ≈380 கி.மீ. | சுமார் 7 மணி | LKR 29,000 முதல் |
| கொழும்பு → கண்டி | ≈115 கி.மீ. | சுமார் 3½ மணி | LKR 11,000 முதல் |
| கொழும்பு விமான நிலையம் (BIA) → கண்டி | ≈100 கி.மீ. | சுமார் 3 மணி | LKR 10,000 முதல் |
| கொழும்பு விமான நிலையம் (BIA) → எல்ல | ≈225 கி.மீ. | சுமார் 5½ மணி | LKR 18,500 முதல் |
| கொழும்பு விமான நிலையம் (BIA) → காலி | ≈150 கி.மீ. | சுமார் 2½ மணி | LKR 13,000 முதல் |
| யாழ்ப்பாணம் → திருகோணமலை | ≈230 கி.மீ. | சுமார் 5 மணி | LKR 18,500 முதல் |
| கொழும்பு விமான நிலையம் (BIA) → கொழும்பு | ≈35 கி.மீ. | சுமார் 1 மணி | LKR 5,500 முதல் |
விமான நிலையத்தில் தரையிறங்குகிறீர்களா?
கொழும்பு (BIA), யாழ்ப்பாணம் (பலாலி), மத்தள. உங்கள் விமான எண்ணைத் தாருங்கள்; தரையிறங்கும் நேரத்துக்கு ஏற்ப ஏற்றும் நேரத்தை அமைப்போம்.
விமான நிலையப் பயணங்கள்ஒவ்வொரு கட்டணத்திலும் அடங்குபவை
- எரிபொருள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டணம்
- ஏற்றும் இடத்தில் 60 நிமிடம் இலவசக் காத்திருப்பு
- வருகை மண்டபத்தில் பெயர்ப் பலகை
- நீண்ட பயணங்களில் சாரதியின் உணவு
- கேட்டால் குழந்தை இருக்கை
- ஏற்றுவதற்கு முன் சாரதி விவரமும் இலக்கத் தகடும்சேவை தொடங்கும்போது
கேள்விகள்
கட்டணம் உண்மையிலேயே நிலையானதா?
ஆம். முன்பதிவின்போது நீங்கள் பார்க்கும் கட்டணமே, வீதி நெரிசல் எப்படி இருந்தாலும், நீங்கள் செலுத்தும் கட்டணம். கட்டண அட்டவணை இறுதியாகும் வரை இந்தத் தளத்தில் உள்ள கட்டணங்கள் மாதிரிகள்; அவை அவ்வாறே குறிக்கப்பட்டுள்ளன.
எப்படிச் செலுத்துவது?
பயண முடிவில் சாரதியிடம் பணமாகச் செலுத்துங்கள். LankaQR, அட்டைக் கொடுப்பனவுகள் விரைவில் ஆரம்பமாகும்.
இலங்கையில் உள்ள என் குடும்பத்தினருக்காக முன்பதிவு செய்யலாமா?
ஆம். “நான் வேறொருவருக்காக முன்பதிவு செய்கிறேன்” என்பதைத் தேர்ந்தெடுத்து, பயணியின் பெயரையும் கைபேசி எண்ணையும் உள்ளிடுங்கள்.
என் விமானம் தாமதமானால்?
உங்கள் விமான எண்ணைத் தாருங்கள்; தரையிறங்கும் நேரத்துக்கு ஏற்ப ஏற்றும் நேரத்தை அமைப்போம். தரையிறங்கிய பின் முதல் 60 நிமிடக் காத்திருப்பு இலவசம்.
எவ்வளவு பைகள் கொண்டு செல்லலாம்?
ஒவ்வொரு வகையும் அதன் இருக்கைகளையும் பைகளையும் காட்டுகிறது. உங்கள் பயணிகள், பைகளின் எண்ணிக்கையைச் சொல்லுங்கள்; பொருந்தும் வகைகளை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.